அக்குபஞ்சர் முறைகளும் வகைகளும் (Acupuncture Styles and Methods)
அக்குபஞ்சர் என்பது வெறும் ஊசி போடுவது, ஒரு குறிப்பிட்ட சிகிச்சை முறை மட்டுமல்ல. இதில் பல உட்பிரிவுகள் உள்ளன. பலர் அக்குபஞ்சர் என்றாலே படுத்துக்கொள்வது, ஊசி போடுவது, பின் அமைதியான இசை என்றுதான் நினைக்கிறார்கள். நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்லும் போது அவர் செய்யும் முறைக்கும், மற்றொருவர் செய்யும் முறைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கலாம். அது ஒரு நோயாளியின் உடலையும் மனதையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப சரியான நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதாகும்.
இது வரை 20வதுக்கும் மேலான அக்குபஞ்சர் முறைகள் அங்கீகாரம் பெற்று உள்ளது. இது தவிர்த்து நூற்றுக்கணக்கான முறைகள் உள்ளன. உங்கள் மருத்துவரிடம் உங்கள் பிரச்சனையை விரிவாகக் கூறினால், அவர் இந்த 20 முறைகளில் உங்களுக்குச் சிறந்ததை இணைத்துச் சிகிச்சையளிப்பார்.